பொது செய்தி

தமிழ்நாடு

லேப் டாப் வழங்கக்கோரி ஐ.டி.ஐ., மாணவர்கள் மனு

Added : ஜன 14, 2020
Advertisement
 லேப் டாப் வழங்கக்கோரி ஐ.டி.ஐ., மாணவர்கள் மனு

விழுப்புரம்:அரசின் இலவச லேப் டாப் வழங்கக்கோரி, ஐ.டி.ஐ., மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கண்டாச்சிபுரம் பழநிவேலு ஐ.டி.ஐ., மாணவர்கள் கொடுத்துள்ள மனு:கண்டாச்சிபுரம், ஆலம்பாடி, கெடார், நல்லாப்பாளையம், அரகண்டநல்லுார் ஆகிய அரசு பள்ளிகளில் மேல்நிலைப் படிப்பை முடித்து, தற்போது ஐ.டி.ஐ., படித்து வருகின்றோம்.இந்நிலையில், தமிழக அரசு சார்பில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட லேப் டாப்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொடுக்காமல் வைத்துள்ளனர். ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்து, ஐ.டி.ஐ., படிக்கும் மாணவர்களுக்கு லேப் டாப்கள் வழங்கப்பட்டுள்ளது.ஐ.டி.ஐ., படிக்கும் எங்களுக்கு கணினி முறை தேர்வு நடைபெறவுள்ளது. ஏழை குடும்பங்களைச் சேர்ந்த நாங்கள் லேப் டாப் வாங்கும் அளவிற்கு வசதியில்லை. எனவே, தொழிற்கல்வி படிக்க ஏதுவாக லேப் டாப் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X