பொது செய்தி

தமிழ்நாடு

இணையதளத்தில் பிறப்பு சான்று பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தல்

Added : ஜன 14, 2020
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் பிற இடங்களில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்தும், http://crstn.org என்ற இணையதளத்தில் இருந்து, 2018ம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு வரையிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இது குறித்து, விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி, பொதுமக்கள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் கோரி மருத்துவமனையோ, ஊராட்சி மன்ற அலுவலகமோ, தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதில்லை. குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பார்கோடு மற்றும் 'க்யூஆர்' கோடு அடிப்படையில் உறுதிபடுத்தப்பட்ட சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு, பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணைய தளத்தில் இருந்து எளிதாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X