பொது செய்தி

தமிழ்நாடு

பெரிய ஏரி மதகில் ஓட்டை: சீரமைத்த மக்கள்

Added : ஜன 14, 2020
Advertisement
 பெரிய ஏரி மதகில் ஓட்டை: சீரமைத்த மக்கள்

செஞ்சி:செஞ்சி அருகே ஏரியில் மதகில் ஏற்பட்ட ஓட்டையை கிராம மக்களும், பொதுப்பணித் துறையினரும் சீரமைத்தனர்.செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது.
இந்த ஏரியிலிருந்து 896 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 5 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த ஆண்டு இந்த ஏரி நிரம்பியது. பாசனத்திற்கு என இரண்டு மதகுகள் உள்ளன.நேற்று அதிகாலை இதில் ஒரு மதகின் அருகே திடீரென ஓட்டை ஏற்பட்டு அதன் வழியாக தண்ணீர் வெளியேறியது.இதையடுத்து கிராம மக்கள் ஜே.சி.பி., உதவியுடன் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மண்ணைக் கொட்டி சரி செய்தனர்.
தகவலறிந்த செஞ்சி பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் கனகராஜ் மற்றும் பொதுப்பணித் துறையினரும் அங்கு வந்து மேலும் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தண்ணீர் வெளியேறாத படி மண்ணைக் கொட்டி சரி செய்தனர். இதனால் தண்ணீர் வெளியேறுவது உடனடியாக நிறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X