பொது செய்தி

தமிழ்நாடு

புகையில்லா போகி! மாசில்லா உலகுக்காக கரம்கோர்ப்போம்: சூழலை காக்க விழிப்புணர்வு

Added : ஜன 14, 2020
Advertisement

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கோலாகலமாக ஆண்டுதோறும் காணப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளாக, 'போகி பண்டிகை' கொண்டாடப்படுகிறது.இந்த நாளில், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பழைய பொருட்களை எரிப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.பழைய பொருட்களை எரிப்பதால் காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
இதனை தவிர்க்க புகையில்லா போகி கொண்டாடுவோம் என மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசிய பசுமைப்படை அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், 'புகையில்லா போகி கொண்டாடுவதன் அவசியம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் உறுதிமொழியும் எடுக்கப்பட்டுள்ளன,' என்றனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் கூறியதாவது:போகி பண்டிகையின் போது, பழைய தீய எண்ணங்களை அழித்து, புதிய நல்ல எண்ணங்களை அமைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், பயன்படுத்தப்பட்ட பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள் போன்ற பல பொருட்களை எரிக்கின்றனர்.
கிராமங்களில் கடைபிடிக்கும் இப்பழக்கம் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தாத ஒன்று.தற்போது நாகரிகம் என்ற பெயரில் மக்கள் அதிகம் நிறைந்த பகுதிகளில் ஆரவாரத்தோடும், குழுக்குழுவாக இரவு முழுவதும் சத்தம் போட்டு சுற்றிக் கொண்டும், டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கையாக தயார் செய்த பொருட்களை எரிந்து நச்சுப்புகையை ஏற்படுத்தி காற்றை மாசுபடுத்துகின்றனர்.இதனால், சுவாசக்கோளாறு, இருமல், கண், மூக்கு எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.
நச்சுப்புகை கலந்த பனி மூட்டத்தால், விமானம் மற்றும் சாலை போக்குவரத்தும் தடைபடுகிறது. குழந்தைகள், கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.உயர்நீதிமன்றம் பழைய மரம், வறட்டி தவிர, மற்ற பொருட்களை எரிக்க தடை விதித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.போகி பண்டிகையன்று, டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிக்க வேண்டாம். பொங்கல் திருநாளை மாசு இல்லாமல் கொண்டாடுவோம். இவ்வாறு, தெரிவித்தார்.
மாசு கட்டுப்படுத்துவோம்!''பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கும் போது, நைட்ரஜன் ஆக்ஸைடு, பென்சின் வனைல், ைஹட்ரோ குளோரைடு போன்ற நச்சு வாயுக்கள் வெளியாகி காற்று மாசடைந்து மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் சுவாசிக்கும் போது, நுரையீரங்களுக்கு சென்று பாதிப்பு ஏற்படுத்தும். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில், காற்று மாசால் உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கு, ஏழு மில்லியன் மக்கள் இறப்பதாக தெரிவித்துள்ளது. மாசினை கட்டுப்படுத்தி வளமான வாழ்க்கையினை உருவாக்குவோம்.
கடந்தாண்டு ஏற்படுத்திய விழிப்புணர்வால், 40 சதவீதம் மாசுகட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு, 100 சதவீதம் குறைக்க உறுதி யேற்போம்,'' என தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X