பொது செய்தி

தமிழ்நாடு

பி.ஏ.பி., முதலாம் மண்டலத்துக்கு தண்ணீர்: வரும், 27ம் தேதி திறக்க அரசுக்கு கருத்துரு

Added : ஜன 14, 2020
Advertisement

பொள்ளாச்சி:பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனம் நிறைவு பெற்ற நிலையில், முதலாம் மண்டல பாசனத்துக்கு, வரும், 27ம் தேதி தண்ணீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்படுகிறது.உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இருந்து, பி.ஏ.பி., பாசனத்தில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
பரம்பிக்குளம் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சர்க்கார்பதியில் மின் உற்பத்தி செய்து, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு சென்று இருப்பு வைக்கப்படுகிறது. பின்னர் பாசனத்துக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.நான்காம் மண்டல பாசனத்துக்காக கடந்தாண்டு செப்., மாதம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு சென்று இருப்பு வைத்து திறக்கப்பட்டது. நான்கு சுற்றுகளாக தண்ணீர் வினியோகிக்கப்பட்ட நிலையில், கடந்த, 11ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.இதனையடுத்து, முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு எப்போது என்றும்; நான்காம் மண்டல பாசனத்துக்கு வழங்கப்பட்டது போன்று நான்கு சுற்று தண்ணீர் கிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.இந்நிலையில், திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் மற்றும் விவசாயிகள், முதலாம் மண்டல பாசனத்துக்கு நான்கு சுற்று தண்ணீர் வழங்க வேண்டும்; வரும், 27ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தினர்.விவசாயிகள் கோரிக்கையை அடுத்து, வரும், 27ம் தேதி தண்ணீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி கூறுகையில், ''நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்ட நிலையில், முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.அதன் அடிப்படையில், முதலாம் மண்டல பாசனத்துக்கு வரும், 27ம் தேதி முதல் தண்ணீர் திறக்கவும்; நான்கு சுற்றுகளாக மொத்தம், 7,600 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கவும் அரசுக்கு கருத்துரு அனுப்பப்படுகிறது.அரசின் உத்தரவு வந்ததும் முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் வினியோகிக்கப்படும்,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X