பொது செய்தி

தமிழ்நாடு

பஸ்களில் எகிறும் பயணிகள் கூட்டம்: விடுமுறையில் கூடுதல் பஸ் இயக்கணும்

Added : ஜன 14, 2020
Advertisement
 பஸ்களில் எகிறும் பயணிகள் கூட்டம்: விடுமுறையில் கூடுதல் பஸ் இயக்கணும்

பொள்ளாச்சி:பொங்கல் விடு முறையை முன்னிட்டு, வால்பாறை செல்லும் பயணிகள் கூட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளதால், பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனை தவிர்க்க, கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.வால்பாறையை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள், வெளியூர்களில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள், முக்கிய பண்டிகைகளை கொண்டாட, சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.இதனால், பண்டிகை காலங்களில், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிவது வழக்கம். கூட்ட நெரிசலை சமாளிக்க, போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்கும்.இந்தாண்டு பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், நேற்று பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் வால்பாறை செல்லும் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகம் காணப்பட்டது.இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணியில் இருந்து, 10:30 மணி வரை வால்பறை செல்லும் பஸ்கள் எதுவும் வரவில்லை. இதனால், கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. பொறுமையிழந்த பயணிகள், போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் முறையிட்டனர்.வால்பாறை பஸ்கள் நிறுத்தப்படும் பகுதிக்கு வந்த அதிகாரிகள், பயணிகளை சமரசம் செய்தனர். அப்போது, ஒரு வால்பாறை பஸ் வந்தது. பஸ்சில் இடம் பிடிக்க, ஜன்னல் வழியாக குழந்தைகளை ஏற்றி விட்டும், பைகளை போட்டும் பயணிகள் போராடினர். 'சீட்' பிடிக்க முடியாதவர்கள், வாடகை காரில் செல்ல முயன்றனர்.21 பஸ்கள் இயக்கம்போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி - வால்பாறை இடையே வழக்கமான நாட்களில் ஒரு நாளைக்கு, 21 பஸ்கள், 43 'சிங்கிள்'கள் இயக்கப்படுகின்றன. பண்டிகையை முன்னிட்டு, இன்று (நேற்று) முதல் வரும், 15ம் தேதி வரை கூடுதலாக நான்கு சிறப்பு பஸ்கள், கூடுதலாக, 12 சிங்கிள்கள் இயங்குகின்றன. கூட்ட நெரிசல் அதிகம் இருப்பதால், சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்,' என்றனர்.தலைக்கு ரூ. 400!பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே உள்ள டாக்சி ஸ்டாண்டில் பயணிகள் விசாரித்த போது, ஆம்னி வேன் டிரைவர்கள், ஒருவருக்கு, 400 ரூபாய் கொடுத்தால் வால்பாறை அழைத்து செல்வதாக கூறினர்.வயதானவர்கள், குழந்தைகளுடன் வந்தவர்கள், உடல் நலமில்லாதவர்கள் வேறு வழியின்றி அதிக கட்டணம் கொடுத்து ஆம்னி வேன்களில் வால்பாறை சென்றனர்.பயணிகள் இது போல அவதிக்குள்ளா வதை தவிர்க்க,அதிக நேர இடைவெளியின்றி பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூடுதல் எண்ணிக்கையில் சிறப்பு பஸ் கள் இயக்க வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஆம்னி வேன் கட்டண கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X