பொது செய்தி

தமிழ்நாடு

வெளியூர் பயணிகளுக்காக பொங்கல் சிறப்பு பஸ்கள்

Added : ஜன 14, 2020
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.பொங்கல் பண்டிகையையொட்டி, இந்தாண்டு ஆறு நாட்கள் தொடர் விடுமுறையாக அமைகின்றன. இதனால், பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமிருக்கும்.இதனால், பஸ்களில் நிலவும் கூட்ட நெரிசலை சமாளிக்க, போக்குவரத்து கழகம் சார்பில் வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.பொள்ளாச்சியில் இருந்து மதுரை, தேனி, திருப்பூர், பழநி உள்ளிட்ட ஊர்களுக்கு, 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், லட்சக்கணக்கான மக்கள் பண்டிகைக்காக வெளியூர்களுக்கு கூடுதலாக பயணிக்கும் நிலையில், இந்த சிறப்பு பஸ்கள் போதாது.அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டம், கோவையில் இருந்து சேலம், திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்க, 25 பஸ்களை பொள்ளாச்சி கோட்டத்தில் இருந்து பெற்றுள்ளதால், பொள்ளாச்சி கோட்டத்தில் பஸ்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், வேறு பகுதியில் இருந்து பஸ்கள் பெற்று, கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க பொள்ளாச்சி போக்குவரத்து கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X