பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கலை முன்னிட்டு கொப்பரை ஏலம் ரத்து

Added : ஜன 14, 2020
Advertisement

பொள்ளாச்சி:பொங்கலை முன்னிட்டு வடக்கிபாளையம், நெகமம் பகுதியில், நடக்கவிருந்த கொப்பரை ஏலம் ரத்து செய்யப்படுகிறது.தென்னை விவசாயிகள் உற்பத்தி செய்யும் கொப்பரைக்கு நியாயமான விலை கிடைக்க, நெகமம், வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் வார நாட்களில் ஏலம் நடத்தப்படுகிறது.வியாபாரிகளிடையே ஏற்படும் போட்டியால், கொப்பரைக்கு விலை உயர்ந்து, விவசாயிகளுக்கு லாபம் பெற்றுத்தரப்படுகிறது.புதன்கிழமைகளில் வடக்கிபாளையத்திலும், வியாழக்கிழமைகளில் நெகமத்திலும் ஏலம் நடக்கிறது. நடப்பு வாரத்தில், பொங்கல் பண்டிகை என்பதால், விவசாயிகள் ஏலத்துக்கு கொப்பரை கொண்டு வர இயலாது என தெரிவித்தனர்.இதனால், வடக்கிபாளையம், நெகமம் கொப்பரை ஏலம் ரத்து செய்யப்படுவதாகவும், அடுத்த வாரம் வழக்கம்போல, ஏலம் நடைபெறும் என்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X