பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க ஆர்ப்பாட்டம்

Added : ஜன 14, 2020
Advertisement
 ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்:தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், பணி பாதுகாப்பு வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கொளஞ்சி வேலு தலைமை தாங்கினார். செயலர் சிவக்குமார் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ஏகாம்பரம், பொதுச் செயலர் பாரி கண்டன உரையாற்றினர். ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் பக்கிரிசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் மகாலிங்கம், வேளாண்மைத் துறை அமைச்சு பணியாளர் சங்க மாநில செயலர் பார்த்திபன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிமராமத்து பணிகள் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக உதவி பொறியாளர் மணிகண்டன் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். ஊரகவளர்ச்சி துறையில் பணியாற்றும் அனைவருக்கும் உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.மாவட்ட பொருளாளர் தண்டபாணி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X