சமத்துவ பொங்கல் விழா மாணவர்கள் கோலாகலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சமத்துவ பொங்கல் விழா மாணவர்கள் கோலாகலம்

Added : ஜன 14, 2020
 சமத்துவ பொங்கல் விழா மாணவர்கள் கோலாகலம்

வால்பாறை:வால்பாறையில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.வால்பாறை அரசு கலை கல்லுாரியில் நடந்த சமத்தவ பொங்கல் விழாவை, கல்லுாரி முதல்வர் பொன்முத்துராமலிங்கம் துவக்கி வைத்தார். இதில், கல்லுாரி போராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை அடுத்துள்ள, முடீஸ் மத்திய நடுநிலைப்பள்ளியில் நடந்த பொங்கல் விழாவை பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ், பள்ளி செயலாளர் ஜான்சன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.பள்ளி மாணவர்கள், சமத்துவ பொங்கல் பண்டிகையை ஆசிரியர்களுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடினர். வால்பாறையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X