பொது செய்தி

தமிழ்நாடு

மது பாட்டில்கள் கடத்திய சென்னை வாலிபர் கைது

Added : ஜன 14, 2020
Advertisement

விழுப்புரம்:கோட்டக்குப்பம் அருகே புதுச்சேரி மாநில மது பாட்டில்களை இருசக்கர வாகனத்தில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா தலைமையிலான போலீசார், நேற்று மதியம் 2:30 மணியளவில், அனிச்சங்குப்பம் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.அப்போது, புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து அவ்வழியே பைக்கில் வந்தவரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் அவர், சென்னை, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார், 21; என்பதும், புதுச்சேரியில் இருந்து 75 மது பாட்டில்களை சென்னை பகுதியில் விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, மதுபாட்டில்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து, கோட்டக்குப்பம் மதுவிலக்கு பிரிவு நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X