பள்ளியில் அறிவியல் கண்காட்சி| Dinamalar

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Added : ஜன 14, 2020

கோவை நேசம் டிரஸ்ட் மற்றும் எஸ்.எஸ்.ஏ., இணைந்து நடத்தும் உண்டு உறைவிடப்பள்ளியில், மாணவர்களிடையே ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்து விதமாக ஆண்டுதோறும் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடக்கிறது.நடப்பாண்டு, பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சுமணன், எஸ்.எஸ்.ஏ., மேற்பார்வையாளர் பிரதீபா, நேசம் டிரஸ்ட் மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.கண்காட்சியில், இயற்கை பாதுகாப்பு, மின் உற்பத்தி, விவசாயம், சுற்றுப்புற சூழல்பாதுகாப்பு, சுகாதாரமான வாழ்க்கை, கம்ப்யூட்டர், பிளாஸ்டிக் ஒழிப்பு, நீர்வளம் காத்தல், இயற்கை சீற்றத்தின் போது பாதுகாத்துக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு படைப்புக்களை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.அறிவியல் கண்காட்சியை வால்பாறை நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கண்டு ரசித்தனர்.கல்லுாரியில் புத்தக கண்காட்சிபொள்ளாச்சி சக்தி தகவல் தொடர்பியல் மேலாண்மை கல்லுாரி, என்.ஜி.எம்., கல்லுாரி சார்பில், புத்தக கண்காட்சி கல்லுாரி வளாகத்தில் நடந்தது.சிம்ஸ் கல்லுாரி இயக்குனர் சுப்ரமணியன், என்.ஜி.எம்., கல்லுாரி முதல்வர் பழனிசாமி ஆகியோர் கண்காட்சி அரங்கை துவக்கி வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். பல்வேறு முன்னணி பதிப்பாளர்கள் பங்கேற்றனர்.கல்லுாரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்களும் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாட்டினை கல்லுாரி நுாலகர்கள் கவிதா, விஜயகுமார் செய்திருந்தனர்.கல்லுாரியில் முப்பெரும் விழா பொள்ளாச்சி பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி, பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லுாரிகளின் சார்பில், முப்பெரும் விழா (காந்தி பிறந்த ஆண்டு விழா, உழவர் திருநாள், பாரதி பிறந்த நாள் விழா) நடந்தது. ஹயக்கிரீவா கல்வி நிறுவனங்களின் செயலர் அருள்மொழி தலைமை வகித்தார். தலைமை நிர்வாகி கவுதம் சிவன் வரவேற்றார்.ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ராமசாமி பங்கேற்று பேசினார். கல்லுாரியின் முதல்வர் கண்ணன் நன்றி கூறினார்.பள்ளி மாணவ, மாணவியருக்கான கலை, இலக்கிய போட்டிகள் நடைபெற்றன. மாணவர்கள் நிகழ்த்திய சலகெருது, தேவராட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.கைப்பேசி பயன்பாடு கருத்தரங்குபொள்ளாச்சி அருகே, அந்தியூர் கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கணினி அறிவியல் துறை சார்பில், நீட்டிப்பு செயல்பாடு என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.கணினி அறிவியல் துறை தலைவர் லட்சுமிபிரியா தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை ரமா நாச்சியார் முன்னிலை வகித்தார். கல்லுாரி, பள்ளி மாணவர்களுக்கு, கைப்பேசி பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை, தீமைகள், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் விளைவுகள் பற்றியும், கணினி வரலாறு மற்றும் வளர்ச்சியை விளக்கமாக காணொளி காட்சி மற்றும் விளக்கபடம்மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முதலீட்டு வழிமுறை கருத்தரங்கம்பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரி வணிகவியல் மற்றும் காப்பீட்டு துறை சார்பில் இளம் முதலீட்டாளர்களுக்கு பயனுள்ள முதலீட்டு வழிமுறைகள் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.கல்லுாரி முதல்வர் பழனிசாமி தலைமை வகித்தார். துறைத்தலைவர் ஜீவா வரவேற்றார். கோவை முதலீட்டு ஆலோசகர் மற்றும் முதலீட்டு சந்தையின் பயிற்சியாளர் சதீஷ்குமார் பங்கேற்று, நிதி விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் பயிற்சி நிதி கல்வியறிவு பற்றி விளக்கம் அளித்தார்.அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும் நிறுவன பொருள்களில் முதலீடு செய்வது குறித்தும், அதில் எவ்வாறு லாபம் அடைவது என்பது குறித்தும் விளக்கினார். மேலும், சேமிப்புக்கும், முதலீடு செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தையும் எடுத்துரைத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X