பொங்கல் பணம் வழங்குவதில் குழப்பம்: குடிநீர், துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு

Added : ஜன 14, 2020
Advertisement

கிணத்துக்கடவு;பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்குவதில் குழப்பம் நீடிக்கிறது.நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் குடிநீர் பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, உள்ளாட்சித் தேர்தல் முடிந்து தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் பதவியேற்றுள்ளனர்.இதனால், ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகையை அந்த அந்த ஊராட்சித் தலைவர்கள் வழங்க வேண்டுமா அல்லது தனி அலுவலர் வழங்க வேண்டுமா என்ற குழப்பம் நீடிக்கிறது.இதனால், பொங்கல் பரிசுத் தொகை பெறமுடியாமல், குடிநீர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அவதிப்படுகின்றனர்.போகி பண்டிகை அன்று வழங்கினால் மட்டுமே பொங்கல் பரிசு தொகை பெற முடியம். அதன்பின், பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக பணம் பரிவர்த்தனை செய்ய முடியாத நிலை உருவாகும்.தற்போது, பதவியேற்றுள்ள தலைவர், துணைத் தலைவர்களுக்கு 'செக்' பவர் வழங்கபடவில்லை. இதனை காரணமாக வைத்து தனி அலுவலரே பொங்கல் பரிசு தொகை வழங்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று வழங்கினால், குடிநீர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பயன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜெயக்குமார் கூறியதாவது:உள்ளாட்சி தேர்தல் முடிந்து தலைவர் பதவி ஏற்றவுடன் முழு பொறுப்பும் தலைவர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.பணம் பரிவர்த்தனைகள் அனைத்தும் 'ஆன்லைன்' மூலமாக செய்ய வேண்டும் என்பதால், அதற்கான பயிற்சி தலைவர்களுக்கு பொங்கல் பண்டிகை முடிந்ததும் வழங்கப்படவுள்ளது.அதன்பின், தலைவர்கள் மூலம் ஊராட்சி நிர்வாகத்தின் அனைத்து வரவு, செலவுகளை 'ஆன்லைன்' மூலம் செய்ய முடியும். இதில், தனி அலுவலர்களுக்கு அதிகாரமில்லை.பொங்கல் பரிசு தொகை வழங்குவதில் நிலவும் குழப்பத்துக்கு தீர்வு காணப்படும்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X