பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் கார் 'பார்க்கிங்'

Added : ஜன 14, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி பொதுமக்களின் வசதிக்காக புதிதாக கார் பார்க்கிங் உருவாக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகன போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கச்சேரி சாலையில் தாறுமாறாக நிறுத்தப்பட்ட பைக், நீண்ட நேரம் நிற்கும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.கடந்த சில தினங்களுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை விரிவுபடுத்தப்பட்டது.இந்நிலையில் கச்சேரி சாலையில் உள்ள பஸ் நிலைய நுழைவு வாயிலில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த ஆட்டோ ஸ்டாண்ட் தற்போது 500 அடி துாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் சார் பதிவாளர் அலுவலகம் முன் உள்ள வேன் ஸ்டாண்டு முற்றிலுமாக அகற்றப்பட்டு, அண்ணா நகருக்கு இட மாற்றம் செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து வேன் நிறுத்தும் இடத்தில் இருந்த காலி பகுதியில், கார் நிறுத்துமிடமாக போலீசார் மாற்றி அமைத்துள்ளனர். பல்வேறு பணிகளுக்காக கள்ளக்குறிச்சிக்கு வருபவர்கள் தங்கள் காரினை 2 மணி நேரம் வரை இங்கு நிறுத்திக்கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X