சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வால்பாறை ரோட்டில் புலி நடமாட்டம்?

Added : ஜன 14, 2020
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - வால்பாறை ரோடு வனப்பகுதியாக உள்ளதால் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில், சமூக வலைதளங்களில், வால்பாறை ரோட்டில் புலி ஒன்று படுத்து இருப்பது போன்றும்; அவ்வழியாக பைக்கில் சென்ற நபர்கள் படம் பிடித்தபடியே செல்வது போன்றும் வீடியோ வெளியாகி வைரலாக பரவியது.இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'சமூக வலைதளங்களில் வந்த வீடியோ, சத்தியமங்கலம் திம்பம் பகுதியில் பதிவு செய்யப்பட்டது. பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் சிறுத்தை, புலி நடமாட்டம் தென்படவில்லை.இருந்தாலும், சுற்றுலா பயணிகள் வழித்தடத்தில் வாகனங்களை நிறுத்தாமல் செல்லவும்; பாதுகாப்பாக செல்வதுடன், வனவிலங்குகள் தென்பட்டால் துன்புறுத்தாமல் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X