பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

Added : ஜன 14, 2020
Advertisement

பொள்ளாச்சி:தென்காசியில் எஸ்.ஐ., யை கொன்ற தீவிரவாதிகள், கேரளாவில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, தமிழக -கேரளா எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.தென்காசியில் எஸ்.ஐ., வில்சன் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் கேரளாவில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் பரவியுள்ளது.இந்நிலையில், தமிழக டி.ஜி.பி., உத்தரவின் பேரில், தமிழக - கேரளா எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.பொள்ளாச்சி கோபாலபுரம், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், நடுப்புணி உள்ளிட்ட எல்லைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.போலீசார் கூறுகையில், 'ஒவ்வொரு சோதனைச்சாவடியிலும், இரண்டு எஸ்.ஐ., மற்றும் இரண்டு போலீசார் உட்பட நான்கு பேர் ஒரு 'ஷிப்ட்'டுக்கு என நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றன. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X