பொது செய்தி

தமிழ்நாடு

குறைகேட்பு கூட்டம்: 280 மனுக்கள் குவிந்தன

Added : ஜன 14, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 280 மனுக்கள் பெறப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கிரண் குராலா தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், ரேஷன் கார்டு, பட்டா மாற்றம், மாற்றுத்திறனாளிகள், ஜாதிச் சான்றிதழ் உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 280 மனுக்கள் பெறப்பட்டன.அனைத்து மனுக்களும் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சங்கீதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சரவணன், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் பிரகாஷ்வேல் மற்றும் தாசில்தார்கள், அனைத்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X