பொது செய்தி

தமிழ்நாடு

சாலையோர டிரான்ஸ்பார்மர் கலெக்டர், சப் கலெக்டர் ஆய்வு

Added : ஜன 14, 2020
Advertisement
 சாலையோர டிரான்ஸ்பார்மர் கலெக்டர், சப் கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி - சேலம் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் இடமாற்றம் செய்வதற்காக கலெக்டர், சப் கலெக்டர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகே உள்ள நான்கு முனை சாலை சந்திப்பில் நாள் தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நெரிசலுக்கு முக்கிய காரணமாக விளங்கும் டிரான்ஸ்பார்மர்களை இடம் மாற்றம் செய்வது குறித்து 'தினமலர்' நாளிதழில் கடந்த சில நாட்களுக்கு முன் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து கலெக்டர் கிரண் குராலா கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன் பின்னர் கச்சிராயபாளையம், சேலம் சாலை சந்திப்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வெளிப்புற சுவர் அருகே அமைக்கப்பட்டுள்ள இரண்டு பெரிய டிரான்ஸ்பார்மர்கள் பள்ளியின் உட்புற பகுதிக்கு கொண்டு சென்று மாற்றி அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளியின் கிழக்கு புறத்தில் உள்ள சுற்றுசுவர் மற்றும் பயன்பாடில்லாத கழிவறை ஆகியவற்றை இடித்து அகற்றிவிட்டு சேலம் சாலை விரிவு படுத்தப்பட உள்ளது. அதற்காக கள்ளக்குறிச்சி சப் கலெக்டர் ஸ்ரீகாந்த், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சத்தியபிரியா, மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா உள்ளிட்டோர் பள்ளி வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.மேலும் இடிக்கப்படும் கழிவறை மாற்று இடத்தில் கட்டுவது மற்றும் டிரான்ஸ்பார்மர் அமைய உள்ள இடத்தினை அளவிடும் பணியும் நேற்று நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X