பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு ரயிலுக்கு விளம்பரம்: கண்கவர் 'டிஜிட்டல் நோட்டீஸ்' பிரசாரம்

Added : ஜன 14, 2020
Share
Advertisement
 சிறப்பு ரயிலுக்கு விளம்பரம்: கண்கவர் 'டிஜிட்டல் நோட்டீஸ்' பிரசாரம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி வழித்தடத்தில் இயக்கப்படும், கோவை - ராமேஸ்வரம் பொங்கல் சிறப்பு ரயில் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவும், ரயிலை தொடர்ந்து இயங்க வைக்கவும், ரயில்வே ஆர்வலர்கள் வலைத்தள பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதியில் லட்சக்கணக்கான தென்மாவட்ட மக்கள் வசிக்கின்றனர். அவர்கள், பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புவது வழக்கம்.
இதனால், 10 ஆண்டுகளுக்கு முன் வரை, மீட்டர் கேஜ் ரயில் பாதையில், பண்டிகை காலங்களில் தென்மாவட்ட நகரங்களுக்கு பொள்ளாச்சி வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.அகல ரயில்பாதையாக மேம்படுத்தப்பட்டு, ரயில் போக்குவரத்து துவங்கிய பின், கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு சிறப்பு ரயில் கூட தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் இயக்கப்படவில்லை.இந்தாண்டு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பொள்ளாச்சி வந்த போது, பல்வேறு அமைப்பினர் அவரை நேரில் சந்தித்து சிறப்பு ரயில் இயக்குவது குறித்து கோரிக்கை எழுப்பினர்.அதன் விளைவாக, கோவை - ராமேஸ்வரம் இடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று, 14ம் தேதி மற்றும் வரும் 16ம் தேதியில் கோவை - ராமேஸ்வரம் இடையே (ரயில் எண், 06031) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. காலை, 9:45 மணிக்கு கோவையில் புறப்பட்டு, 10:40 மணிக்கு பொள்ளாச்சி, 11:13 மணிக்கு உடுமலை, மதியம், 02:05 மணிக்கு மதுரை வழியே சென்று, மாலை, 6:45 மணிக்கு ராமேஸ்வரத்தை அடைகிறது.எதிர் மார்க்கத்தில், ராமேஸ்வரம் - கோவை இடையே (எண், 05032) வரும், 15 மற்றும், 17 ம் தேதிகளில் இயக்கப்படுகிறது.
ராமேஸ்வரத்தில் காலை, 8:40 மணிக்கு புறப்பட்டு, 11:25க்கு மதுரை, மதியம், 2:40க்கு உடுமலை, 3:30க்கு பொள்ளாச்சி வழியே பயணித்து, மாலை, 5:30க்கு கோவையை அடைகிறது. இந்த ரயிலுக்கு முன்பதிவு வசதி இல்லை.இந்த சிறப்பு ரயில் இயக்குவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினால், அதிக கட்டணம் கொடுத்து தனியார் பஸ்களில் பயணிப்பதை தவிர்க்கலாம்.ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தால், அதை வைத்து ரயிலை நிரந்தரமாக இயக்க கோரிக்கை விடுக்கலாம் என்பதற்காகவும், சிறப்பு ரயில் குறித்து சமூக வலைத்தளங்கள் மூலம் பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் உள்ளிட்ட ரயில்வே ஆர்வலர்கள் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக, பொங்கல் வாழ்த்து வடிவிலான கண்கவர் வடிவில் ரயில் நேரம், கட்டணம் குறித்த விவரங்களுடன் 'டிஜிட்டல் நோட்டீஸ்' தயாரித்து, வாட்ஸ்ஆப், பேஸ்புக், டிவிட்டர் மூலம் பரப்பி வருகின்றனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.கட்டணம் எவ்வளவு?பண்டிகை சீசன்களில் தனியார் ஆம்னி பஸ்கள் கட்டண கொள்ளை அடிக்கும் நிலையில், சிறப்பு ரயிலில் கட்டணம் குறைவாகவே உள்ளது. பொள்ளாச்சி - பழநி, 40 ரூபாய்; பொள்ளாச்சி - திண்டுக்கல், 55 ரூபாய்; பொள்ளாச்சி - ராமநாதபுரம், 100 ரூபாய்; பொள்ளாச்சி - ராமேஸ்வரம், 115 ரூபாய் மட்டுமே சிறப்பு ரயில் கட்டணமாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X