பொது செய்தி

தமிழ்நாடு

புதர் சூழ்ந்த இணைப்பு ரோடு

Added : ஜன 14, 2020
Advertisement
 புதர் சூழ்ந்த இணைப்பு ரோடு

பொள்ளாச்சி:தேவம்பாடிவலசு- நடுப்புணி ரோட்டை ஆக்கிரமித்துள்ள புதர்களை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், தேவம்பாடிவலசு வழியாக நடுப்புணி ரோட்டை அடைவதற்காக தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக, இந்த ரோடு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த ரோடு, சீரமைக்கப்பட்டு, புதுபொலிவு பெற்றது. ஆனாலும், கருங்கல் லோடு ஏற்றிய லாரிகள் வேகமாக செல்வதால், தேவம்பாடிவலசு குளக்கரை ரோடு, ஆங்காங்கே சேதமடைந்துள்ளது.ரோடு பழுது சீரமைக்கப்படாத நிலையில், குளத்தில் இருந்து நடுப்புணி ரோட்டை அடையும் இணைப்பு ரோடு, ஒரு கி.மீ., துாரத்துக்கு புதர் சூழ்ந்துள்ளது. எதிரில் வாகனம் வரும் போது, ஒதுங்க வழியில்லாத நிலை நிலவுகிறது.நடுப்புணி ரோட்டில் இருந்து, தேவம்பாடிவலசு குளம் வரை, ரோட்டோரம் வளர்ந்த புதர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X