சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில்வே கேட் திறப்பதில் தாமதம் கலெக்டர் அலுவலகத்தில் மனு

Added : ஜன 14, 2020
Advertisement

விழுப்புரம்:ரயில்வே கேட் உடனடியாக திறக்கபடுவதில்லை என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
விழுப்புரம் அடுத்த வி.தொட்டி, சகாதேவன்பேட்டை, ராமையன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் கொடுத்துள்ள மனு:வளவனுார் பேரூராட்சியில் இருந்து வி.தொட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் எல்.சி., 11 என்ற ஆளில்லா ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட் வழியாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர்.இந்நிலையில், தற்போது இந்த ரயில்வே கேட், ரயில் செல்லும்போது மூடப்படுகிறது. இதை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில்வே கேட் திறக்கப்படாத நிலை நீடித்து வருகிறது.இதனால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றோம்.எனவே, ரயில்வே கேட் உடனடியாக திறக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X