பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை

Added : ஜன 14, 2020
 பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை

கூடலுார்:கூடலுார், மண்வயல் அருகே, பாசன கால்வாயில் தண்ணீர் வராததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுார், ஸ்ரீமதுரை ஊராட்சி மண்வயல் அருகே கம்மாத்தி, சேமுண்டி, கீச்சலுார், புத்துார்வயல் பகுதி மக்களுக்கு விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள், கோடையில் காய்கறிகள்; பருவமழை காலத்தில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.கோடை காலத்தில், விவசாயத்திற்கு போதிய பாசனநீர் கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர். இதற்கு தீர்வாக, இவ்வழியாக செல்லும் கம்மாத்தி ஆற்றின் குறுக்கே, மணலி பகுதியில் தடுப்பணை அமைத்து, அங்கிருந்து பாசன கால்வாய் மூலம் விவசாயத்திற்கு, பாசனநீர் வழங்கி வருகின்றனர். அந்த கால்வாய் சிமென்ட் கால்வாயாக மாற்றப்பட்டுள்ளது.தற்போது, கம்மாத்தியை தவிர, பிற பகுதிகளுக்கு பாசன கால்வாய் மூலம், தண்ணீர் வருவதில்லை. விவசாயிகள் பாசனத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். பிரச்னைக்கு, தீர்வு காண நடவடிக்கை இல்லாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். விவசாயிகள் கூறுகையில், 'பருவ மழை காலத்தில், நெல் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் பிரச்னை இல்லை. கோடையில், பாசனத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல், காய்கறி மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. தடுப்பணையிலிருந்து, பாசன கால்வாய் மூலம், விவசாயத்துக்கு தேவையான, தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X