பொது செய்தி

தமிழ்நாடு

'போதை பழக்கம் சமூகத்தை அழிக்கும்'பழங்குடி கிராம நிகழ்ச்சியில் கருத்து

Added : ஜன 14, 2020
Share
Advertisement
 'போதை பழக்கம் சமூகத்தை அழிக்கும்'பழங்குடி கிராம நிகழ்ச்சியில் கருத்து

பந்தலூர்:'போதை பழக்கம் தொடர்ந்தால் ஒட்டுமொத்த சமுதாயம் சீரழியும்,' என, அறிவுறுத்தப்பட்டது.கூடலுாரில், செயல்பட்டு வரும் காந்தி அமைதி மையம் சார்பில், கிராமங்கள் தோறும் மது விழிப்புணர்வு பிரசாரம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதில், பந்தலுார் அருகே கூவமூலா பழங்குடியின கிராமத்தில் போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
சமுதாய கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி பணியாளர் பிரகாஷ் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் பேசுகையில், ''மது அருந்துவதால் மகிழ்ச்சி ஏற்படுவதாக நினைத்தால் அது தவறான கணிப்பு ஆகும். இதனால், சமுதாயத்தில் மதிப்பு கெட்டு விடும் சூழல் ஏற்படும். மேலும், இதயம், கல்லீரல், குடல், கணையம், சிறுநீரகம், நரம்பு மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
அத்துடன் பழங்குடியின மக்கள் தங்கள் குழந்தைகள் முன்பாக அமர்ந்து மது அருந்துவதால், குழந்தைகளும் போதை பழக்கங்களுக்கு ஆட்பட்டு எதிர்காலத்தில் ஒட்டுமொத்த சமுதாயமே பாதிக்கப்பட்டு சீரழியும் நிலையை உருவாக்கும்.குடி பழக்கத்தை கைவிட, உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பெண்கள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை மதுபிடியிலிருந்து மீட்க எங்களை அணுகலாம்,'' என்றார். தொடர்ந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பணியாளர் சிவப்பிரகாஷ், நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X