பொது செய்தி

தமிழ்நாடு

நீதிபதிகளை நியமிக்க வலியுறுத்தல்:வரும் 20ல் உண்ணாவிரத போராட்டம்

Added : ஜன 14, 2020
Advertisement
 நீதிபதிகளை நியமிக்க வலியுறுத்தல்:வரும் 20ல் உண்ணாவிரத போராட்டம்

கூடலுார்:'கூடலுார், பந்தலுார் கோர்ட்களில், காலியாக உள்ள நான்கு நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,' என, வக்கீல் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கூடலுார் கோர்ட் நுழைவு வாயில் மு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் வர்கீஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 'கூடலூர், பந்தலூர் கோர்ட்டுகளில் காலியாக உள்ள சார்பு நீதிபதி, மற்றும் மாஜிஸ்திரேடுகள் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்,' என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
சங்க செயலாளர் ஜெயனுல்பாபு கூறுகையில்,''கூடலூர், பந்தலூரில் உள்ள கோர்ட்டுகளில் நிரந்தர நீதிபதிகள் இன்றி, நீதிமன்றம் தொடர்பான பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, நீதிபதி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.கோரிக்கையை வலியுறுத்தி, 20ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும்,'' என்றார்.வக்கீல்கள் பாஸ்கரன், பரசுராமன், சாக்கோ மற்றும் பலர் பங்கேற்றனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X