பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.6 கோடி! மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கட்டடத்திற்கு...பெருந்திட்ட வளாகத்தில் கட்டுமான பணி துவக்கம்

Added : ஜன 14, 2020
Advertisement
 ரூ.6 கோடி! மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கட்டடத்திற்கு...பெருந்திட்ட வளாகத்தில் கட்டுமான பணி துவக்கம்

விழுப்புரம்:விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வைப்பதற்கு, 6 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கியது.
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் சட்டசபை மற்றும் லோக் சபா தேர்தலின்போது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அந்தந்த மாவட்டங்களில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு வருகிறது.அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு, தனியாக அறை ஒதுக்கி, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைத்து, கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், தேர்தல் முடிந்த பிறகு பழுதான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகளும், இங்கு மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்க, தனியாக கட்டடம் கட்டுவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.இதற்காக, 6 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் புதிய கட்டடம் கட்டுவதற்கு, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் எஸ்.பி., முகாம் அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்தனர்.அங்கிருந்த புதர்கள் அகற்றிவிட்டு, கட்டுமான பணிகளில் விழுப்புரம் பொதுப்பணித்துறை கட்டுமானப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு, தலா 738 சதுர மீட்டர் பரப்பளவில், தரைத்தளம் மற்றும் முதல் தளம் ஆகிய இரண்டு தளங் களில் கட்டடம் கட்டப்படு கின்றது. இப்பணி 8 மாதங்களில் முடிக்க ஒப்பந்தகாலம் வழங்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, கட்டடம் கட்டுவதற்கான இடம் அளவீடு செய்து, பில்லர் அமைக்கும் பணியை துவங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X