பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் வெள்ளி விழா செண்டை மேளம் முழங்க பேரணி

Added : ஜன 14, 2020
Advertisement
 அரசு பள்ளியில் வெள்ளி விழா செண்டை மேளம் முழங்க பேரணி

கூடலுார்:கூடலுார், குங்கூர்மூலா அரசு மேல்நிலைப்பள்ளி வெள்ளி விழா ஆண்டு நிகழ்ச்சி நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை, 9:00 மணிக்கு மண்வயல்பகுதியிலிருந்து வெள்ளி விழா பேரணி துவங்கியது. பேரணியை ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கங்காதரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.பேரணி செண்டை மேளம் இசைக்க, அம்மங்குடம் ஆட்டத்துடன் பள்ளியை வந்தடைந்தது. தொடர்ந்து நடந்த விழாவில், ஆசிரியை யோகேஸ்வரி வரவேற்றார். விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுகுமாரன் தலைமை வகித்தார். விழா ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ரவிக்குமார் வெள்ளி விழா குறித்த அறிக்கை சமர்ப்பித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் வெள்ளி விழா சின்னத்தை வெளியிட்டார். சிறப்பு நுழைவு வாயிலை, கூடலூர் எம்.எல்.ஏ., திராவிடமணி; உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தை மாவட்ட கல்வி அலுவலர் பழனிச்சாமி திறந்து வைத்து பேசினர். தொடர்ந்து, கலை, இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.விழாவில், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆனந்தசயணன், நிர்வாகிகள் குஞ்சுமுகமது, உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X