பொது செய்தி

தமிழ்நாடு

வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில் தானியங்கி கேமராக்கள் பயன்பாடு

Added : ஜன 14, 2020
Advertisement

கூடலுார்:முதுமலை, வெளி வட்ட (பப்பர் ஜோன்) பகுதியில் புலி, சிறுத்தைகள் எண்ணிக்கை குறித்து அறிந்து கொள்ள, தானியங்கி கேமராக்களில் பதிவான, அதன் படங்களை, தேசிய புலிகள் ஆணையத்துக்கு அனுப்பும் பணியில், வனதுறையினர் ஈடுபட்டுள்ளனர்.முதுமலை புலிகள் காப்பகம், வெளிவட்டம் பகுதியில், பருவ மழைக்கு பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள், நவ., 23ல் துவக்கி, 29ம் தேதி வரையும்; உள்வட்ட பகுதியில், டிச., 5 ல் துவங்கி, 11ம் தேதியிலும் நிறைவு பெற்றது.இரண்டாம் கட்டமாக, தானியங்கி கேமராக்கள் மூலம், வெளிவட்ட பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள், டிச.7ல் துவங்கியது. இதற்காக, 204 இடங்களில் தலா இரண்டு தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தொடர்ச்சியாக, 25 நாட்கள் நடந்த பணிகள், கடந்த, 10 தேதி நிறைவு பெற்றது. அந்த கேமராக்களில் பதிவான படங்களை வனத்துறையினர், கம்ப்யூட்டர்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதில், பதிவான புலி சிறுத்தை படங்களை, தேசிய புலிகள் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க உள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில்,'தானியங்கி கேமராக்களில் பதிவான புலி, சிறுத்தை படங்கள் மட்டும் தேசிய புலிகள் ஆணையத்திற்கு அனுப்பபடும். அங்கு புலி சிறுத்தை படங்களை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து, அவைகள், எண்ணிக்கை குறித்து அறிவிக்கப்பட உள்ளது. அடுத்த வாரம், முதுமலை உள்வட்டம் பகுதியில் தானியங்கி கேமராக்கள் மூலம் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி துவங்கும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X