பொது செய்தி

தமிழ்நாடு

'கல்வி ஒன்றே சமூக மாற்றத்தை ஏற்படுத்தும்': விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கருத்து

Added : ஜன 14, 2020
Advertisement

பந்தலூர்:பழங்குடியின மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் இருந்தால் மட்டுமே, தங்கள் சமுதாயத்தில் மாற்றம் காண முடியும்,' என, அறிவுறுத்தப்பட்டது.பந்தலுார் அருகே, அம்பலமூலாவில் டி.என்.பி.எஸ்.சி., இலவச வகுப்புகளுக்கான துவக்க நிகழ்ச்சி நடந்தது. கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி வயநாடுஆதிவாசிகள் நல சங்கம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில், மாணவி சீதா வரவேற்றார்.சங்கத்தின் மேலாளர் ரொனால்டு தலைமை வகித்து பேசுகையில்,''கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளபழங்குடியினர் தொடர் விழிப்புணர்வு காரணமாக, கல்லூரி படிப்பில் நாட்டம் செலுத்தும் அளவிற்கும், வேலை வாய்ப்புகளில் பங்கேற்கும் அளவிற்கும் தங்களை வளர்த்து கொண்டு வருகின்றனர். அத்தகயை மாணவர்கள், இந்த பயிற்சி வகுப்பில், பங்கேற்று பயனடைய வேண்டும்,'' என்றார்.சமூக ஆர்வலர், சித்திரவேல் பேசுகையில்,''இளைஞர்கள் தங்கள் சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இலக்கை நோக்கி பயணித்தால் மட்டுமே, அடித்தட்டில் உள்ள பழங்குடியினர் சமுதாயம் முன்னோக்கி நகரும். கல்வி ஒன்றே சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் இளைய தலைமுறையினர் கல்வி கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். அதற்கான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும்,'' என்றார்.பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''போட்டி தேர்வுகள் என்ற அச்சத்தை தவிர்த்து, சாதாரண தேர்வு எனும் நோக்கில், தேர்வு எழுதினால் பொதுத் தேர்வுகளில் சாதிக்க முடியும்.அதற்கான முயற்சி துவக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பில் அனைவரும் பங்கேற்று பயன் பெற வேண்டும்,'' என்றார்.நூலகர் அறிவழகன் பேசுகையில், ''கல்லூரிகளில் சேர்ந்து அதிக பட்டப்படிப்புகளை படித்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்ற நிலையை மாற்றி,என்ன படித்தால் எந்தமாதிரியான பணியில் சேர முடியும் என்பதை தெரிந்து கொண்டு படிக்க வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, ஓய்வுபெற்ற அலுவலர் சுந்தரலிங்கம் உட்பட பலர் பேசினர். மாணவி மஞ்சு நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X