பொது செய்தி

தமிழ்நாடு

தமிழர் திருநாள் கவியரங்கம்

Added : ஜன 14, 2020
Advertisement
 தமிழர் திருநாள் கவியரங்கம்

திண்டிவனம்:திண்டிவனம் தமிழ்ச் சங்கம், ஓமந்துார் வீ.கே.எம்.வித்யாலயா பள்ளி சார்பில், தமிழர் திருநாள் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தனர். 'பொங்குக பொங்கலே' என்ற தலைப்பில் நடந்த கவியரங்கத்திற்கு, திண்டிவனம் தமிழ்ச்சங்கத் தலைவர் துரை ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொருளாளர் ஜானகிராமன் வரவேற்றார். பாலபழனி, நமச்சிவாயம் முன்னிலை வகித்தனர்.கவிதை வாசிப்போர் நிகழ்ச்சியில், ஆதிசீனுவாசன், நிதீஷ்குமார், ராஜாமணி, எல்லம்மாள், ஓய்வு பெற்ற நடத்துனர் ரஞ்சித்குமார், தரணி ஆகியோர் பங்கேற்றனர். விழாவையொட்டி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், அனைத்து நிலை ஆசிரியர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் சஞ்சீவிராயன், தமிழ்ச்சங்க நிர்வாகி வேட்டவராயன், வாசகர் வட்ட தலைவர் ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தங்க விஜயன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X