திறந்தவெளியில் குப்பை சுகாதாரம் கடும் பாதிப்பு

Added : ஜன 14, 2020
Advertisement

கூடலுார்:கூடலுார்-கோழிக்கோடு சாலையில் மரப்பாலம் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் இருந்து புளியம்பாறை செல்லும் சாலையோத்தில், வாகனங்கள் மூலம் எடுத்து செல்லும் வகையிலான குப்பைத்தொட்டி வைத்துள்ளனர். சமீப காலமாக, குப்பைகளை முறையாக அகற்றப்படவில்லை.அப்பகுதியில் கடந்த இரண்டு மாதமாக குப்பை நிரம்பிய தொட்டி அகற்றப்படவில்லை. இதனால் மக்கள் திறந்த வெளியில் குப்பை கொட்டி வந்தனர்.இந்நிலையில், கடந்த வாரம், உள்ளாட்சி சுகாதார ஊழியர்கள், அந்த குப்பை தொட்டி மட்டும் அகற்றி, புதிய குப்பை தொட்டி வைத்து சென்றனர். திறந்த வெளியில் கொட்டப்பட்டு குப்பைகள் அகற்றப்படவில்லை. அப்பகுதியில், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.மக்கள் கூறுகையில்,'இப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் குறித்த காலத்துக்குள் அகற்றப்படததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய்கள் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம், திறந்தவெளியில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதுடன், குப்பை தொட்டிகளில் கொட்டப்படும் குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X