சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்கள் இயக்குவதில் காலதாமதம்: கோத்தகிரியில் பயணிகள் மறியல்

Added : ஜன 14, 2020
Advertisement

கோத்தகிரி:கோத்தகிரியில் இருந்து, ஊட்டி, குன்னுாருக்கு அரசு பஸ்கள் இயக்காததால், மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கோத்தகிரியில் இருந்து ஊட்டி மற்றும் குன்னூருக்கு, 10 நிமிடங்களுக்கு ஒருமுறை அரசு பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.தற்போது, மாவட்டம் முழுவதும் ஹெத்தை பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவதால், பஸ்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.இந்நிலையில், நேற்று பிற்பகல், 12:00 மணியில் இருந்து, ஊட்டிக்கும், 12:40 மணியிலிருந்து குன்னூருக்கும், அரசு பஸ் இயக்கப்படவில்லை.அதே நேரத்தில், ஊட்டியில் இருந்து வந்த அரசு பஸ், பெயர் பலகை வைக்காமல், நீண்ட நேரம் நிறுத்தப்பட்டது. எனினும், கூட்ட நெரிசல் காரணமாக, ஊட்டிக்கு செல்லும் பயணிகள் ஏறி அமர்ந்தனர்.பஸ் எடுக்காததால் கோபமடைந்த பயணிகள், சாலையில் நின்று மறியலில் ஈடுபட்டனர். பஸ் ஸ்டாண்டில், பாதுகாப்பு மற்றும் சாலை சீரமைப்பு பணிக்கு போலீசார் யாரும் இல்லாததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.15 நிமிடங்களுக்கு பிறகு, அங்கு வந்த போலீசார் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள், பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.தொடர்ந்து, ஊட்டிக்கு பஸ் செல்ல ஏற்பாடு செய்ததால், மறியல் மதியம், 1:45 மணிக்கு கைவிடப்பட்டது. அதன் பிறகு, குன்னூருக்கு, 2 மணி நேர கால தாமதமாக, அரசு பஸ் இயக்கப்பட்டது.பயணிகள் கூறுகையில், 'கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, அரசு பஸ்களில் பயணிகள் குறைவாக இருந்தாலும், 'எக்ஸ்பிரஸ்' என்பதால் இயக்கப்பட்டது. ஊட்டி, குன்னூருக்கு, சாதாரண பஸ்கள் இயக்கப்படுவதில்லை,' என்றனர்.போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில்,'திருவிழா நேரம் என்பதால் கூட்டம் அதிகரித்துள்ளது. கண்டக்டர்கள் பற்றாக்குறை காரணமாக பஸ் எடுக்க காலதாமதம் ஆனது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X