பஸ் நேரத்தை மாற்ற வேண்டும்: கலெக்டரிடம் இளைஞர்கள் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் நேரத்தை மாற்ற வேண்டும்: கலெக்டரிடம் இளைஞர்கள் மனு

Added : ஜன 14, 2020
Share
ஊட்டி:'முட்டி நாடு கிராமத்துக்கு குறித்த நேரத்தில் பஸ் இயக்க வேண்டும்,' என, வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.ஊட்டி அருகே முட்டி நாடு கிராமத்தில், 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்கு, ஊட்டிக்கு வருகின்றனர். காலை, 8:00 மணிக்கு முட்டி நாட்டிலிருந்து ஊட்டிக்கு புறப்படும் பஸ் நேரத்தை காலை, 6:00 மணிக்கு மாற்ற வேண்டும்;

ஊட்டி:'முட்டி நாடு கிராமத்துக்கு குறித்த நேரத்தில் பஸ் இயக்க வேண்டும்,' என, வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.ஊட்டி அருகே முட்டி நாடு கிராமத்தில், 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்கு, ஊட்டிக்கு வருகின்றனர். காலை, 8:00 மணிக்கு முட்டி நாட்டிலிருந்து ஊட்டிக்கு புறப்படும் பஸ் நேரத்தை காலை, 6:00 மணிக்கு மாற்ற வேண்டும்; மாலை, 5:30 மணிக்கு ஊட்டியிலிருந்து புறப்படும் நேரத்தை இரவு, 7:30 மணிக்கு மாற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வசதி இல்லாததால், அப்பகுதி இளைஞர்கள் வேலைக்கு செல்ல முடியாமலும், பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நேரங்களில், அவர்கள், தனியார் வாகனங்களில், அதிக கட்டணம் செலுத்தி கிராமத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இதனால், 'பஸ் நேரத்தை மக்களின் வசதிக்கேற்ப மாற்ற வேண்டும் அல்லது அதிகரட்டி பஸ்சை காலை, மாலை நேரத்தில் முட்டி நாடு வரை நீட்டிக்க வேண்டும். இதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் வந்தனர். கோரிக்கை மனுவை, கலெக்டரிடம் அளித்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X