பொது செய்தி

தமிழ்நாடு

மனித-விலங்கு மோதல் அதிகரிப்பு

Added : ஜன 14, 2020
Advertisement

கோத்தகிரி:கோத்தகிரி பகுதியில் மனித-விலங்கு மோதல் அதிகரித்து வருகிறது.நீலகிரியில் வனமும், அதனை ஒட்டி, தேயிலை தோட்டங்களும் நிறைந்துள்ளன. அதில், கோத்த கிரியில், சமீபகாலமாக, தேயிலை தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள், கான்கிரீட் காடுகளாக மாறி விட்டதால், யானை, சிறுத்தை, கரடி மற்றும் காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் வாழ்விட பாதைகள் மாறிவிட்டன.இதனால், வனவிலங்குகள், கிராம குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. தவிர, வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதால், உணவை தேடி அவை நகர பகுதியில் முகாமிட்டு வருகின்றன. இவ்வாறு வரும் வன விலங்குகள் மனிதர்களை அடிக்கடி தாக்குவதால், உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த, கோத்தகிரியில் நடந்த விவசாய சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.விவசாயிகள் சங்க தலைவர் போஜன் கூறுகையில்,''மாவட்ட நிர்வாகம், விவசாய நிலங்களை அழித்து கட்டடங்கள் கட்டுவதற்கு முழுமையாக தடை விதிக்கவேண்டும். தவிர, வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியை நோக்கி வராமல் இருக்க, வனத்தில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து, வனவிலங்குகளை கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X