பொது செய்தி

தமிழ்நாடு

 மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையை பின்பற்றினால் இனி எல்லாம் சுகமே!

Added : ஜன 14, 2020
Advertisement

ஊட்டி:'மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் சுகாதாரத்தை மேலும் மேம்படுத்த வேண்டும்,' என, உள்ளாட்சி அதிகாரிகள்; பிரதிநிதிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.நீலகிரியில், 6 தாலுகாவின் கீழ், 35 கிராம ஊராட்சிகள் உள்ளன. 1.30 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. மாவட்ட நிர்வாகம், 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், கிராமப்புற சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
குறிப்பாக, திறந்தவெளிமலம் கழித்தலற்ற கிராமமாக உருவாக்க அனைத்து கிராமங்களில் உள்ள வீடுகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணி கிராம ஊராட்சியை பொறுத்தவரை, 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பின்பு, கிராம ஊராட்சிகளில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து, நான்கு ஒன்றியங்களில் உள்ள பி.டி.ஓ., க்கள், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் கீழ், மக்கள் பிரதிநிதிகளுக்கு, சுகாதார திட்ட பணிகள் குறித்த பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.அதை செயல்படுத்த, கிராம ஊராட்சி தலைவர்களும் உறுதி ஏற்றுள்ளனர். அதில், முன்மாதிரியாக திகழும் ஊராட்சிகளுக்கு பரிசு வழங்கவும், மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.கேள்வி கேட்கணும்!வரும், 26ம் தேதி அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில், கிராம சபை கூட்டம் நடக்கிறது. கிராம சபை கூட்டத்தில், முந்தைய காலகட்ட வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும்; எந்த பணியாக இருந்தாலும் கிராம சபையில் ஒப்புதல் பெற்று செய்ய வேண்டும்; பணிகளை மக்கள் கண்காணித்து கேள்வி கேட்க வேண்டும்; அனைத்து பணிகளும் நடக்கும் இடத்தில் பணி விவரம் பலகை வைக்கப்படவேண்டும்; பணிகள் குறித்து கண்காணிக்க மக்கள் குழு அமைக்கப்படவேண்டும். இவற்றை செயல்படுத்தினால் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை.
இதை உணர்ந்து, மக்கள் அனைவரும் தவறாமல் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும். கேள்விகளை எழுப்ப வேண்டும்.கலெக்டர் அறிவுரைநீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,''கிராம ஊராட்சிகளின் சுகாதாரத்தை, தற்போது உள்ளதை விட, மேம்படுத்தும் வகையில், அந்தந்த பி.டி.ஓ., க்கள் மூலம் கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. துாய்மை பணிகளில் கிராமம் மேம்பட்டால், பிற பணிகளும் சிறப்பான முறையில் நடக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X