அரசு மருத்துவமனையில் பொங்கல் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் பொங்கல் விழா

Added : ஜன 14, 2020
 அரசு மருத்துவமனையில் பொங்கல் விழா

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.செவிலியர் சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பழமலை தலைமை தாங்கினார். டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் மண் பானையில் பொங்கல் சமைத்து வழிபட்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பொங்கல் விநியோகம் செய்யப்பட்டது.நிகழ்ச்சியில் மருத்துவர்கள் பொற்செல்வி, கணேஷ் ராஜா, குரல்இனியன், வாசுகி, சவுமியா, முத்துக்குமார் செவிலியர் சங்கத் தலைவர் சக்திவேல், கண்காணிப்பாளர் நாகலட்சுமி, ராணி, கேசவலு, சுசீலா, கல்பனா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X