பொது செய்தி

தமிழ்நாடு

குறை தீர் கூட்டம் மனுக்கள் குறைவு

Added : ஜன 14, 2020
Advertisement

ஊட்டி:ஊட்டி, கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடக்கும் குறை தீர்க்கும் கூட்டத்தில், நடைப்பாதை, சாலைவசதி, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி சராசரியாக, 150 முதல் 200 மனுக்கள் வருகிறது.கடந்த, 8 ஆண்டுக்கு பின், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தற்போது, மாவட்டத்தில் உள்ள,35 கிராம ஊராட்சியின் கீழ் உள்ள மக்கள், அடிப்படை பிரச்னைகளை மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவிக்க ஆயத்தமாகியுள்ளனர். இதனால், நேற்று நடந்த குறை தீர்க்கும் முகாமில், குறைந்தளவிலான மனுக்கள் பதிவாகியுள்ளது.அதிகாரிகள் கூறுகையில்,'உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதால் பொது பிரச்னைகள் குறைய வாய்ப்புள்ளது. மேலும், மக்களுக்கு தங்கள் பிரதிநிதிகளிடம், குறைகளை கூற தயாராக உள்ளனர். இதனால், மனுக்கள் குறைந்துள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X