கால்நடை டாக்டர்களுக்கு சம்பளம் இல்லை: தினசரி தேவைகளுக்கு கடன் வாங்கும் நிலை

Added : ஜன 14, 2020
Advertisement

பந்தலுார்:கால்நடை பராமரிப்பு துறையில், பணியாற்றும் தற்காலிக கால்நடை டாக்டர்களுக்கு, 4 மாதங்களாக சம்பளம் வழங்காததால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.மாநில கால்நடை பராமரிப்பு துறையில், காலியாக உள்ள கால்நடை உதவி டாக்டர் பணியிடங்களுக்கு, கடந்த, 2018ம் ஆண்டு, நவ., மாதம், ஒப்பந்த அடிப்படையில், 818 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர்.
இவர்களுக்கு மாதந்தோறும், 40 ஆயிரம் ரூபாய், தொகுப்பூதிய அடிப்படையில் வழங்கப்படுகிறது.ஒப்பந்த காலமான, 11 மாதம், கடந்த செப்., மாதம் நிறைவு பெற்ற நிலையில், அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு பின்னர், மீண்டும் புதிய ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த, 4 மாதங்களாக, சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், வீட்டு வாடகை கொடுக்க கூட வழியில்லாத நிலையில், தங்களின் தினசரி தேவைகளை பூர்த்தி செய்ய வழியில்லாமல் திண்டாடி வருகின்றனர்.கால்நடை பராமரிப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மீண்டும் ஒப்பந்த முறையில் பணியில், சேர்க்கப்பட்ட, கால்நடை உதவி டாக்டர்களுக்கு, சம்பளம் வழங்க அரசு ஆணை வழங்கவில்லை. இதனால் சம்பளம் வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் தீர்வு கிடைக்கும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X