சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பன்றி காய்ச்சலுக்கு பெண் பலி: பந்தலூர் பகுதியில் பரபரப்பு

Added : ஜன 14, 2020
Advertisement

பந்தலுார்:பந்தலுார் பகுதியை சேர்ந்த பெண், பன்றி காய்ச்சலுக்கு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பந்தலுார் அருகே, நெல்லியாளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜிதா,-22. கர்ப்பிணியான இவர், எருமாடு அருகே, திருவம்பாடியில் அவரது தாயார் வீட்டிற்கு பிரசவத்திற்கு சென்றுள்ளார். காய்ச்சல் வந்ததால், அவர், கூடலுார் அக்கார்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு காய்ச்சல் அதிகரித்ததால், மேல்சிகிச்சைக்காக, கேரள மாநிலம் கோழிக்கோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நேற்று முன்தினம் அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது.தொடர்ந்து காய்ச்சல் நிற்காத நிலையில், நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக உயிரிழந்தார். 'இவருக்கு பன்றிகாய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தார்,' என, கோழிக்கோடு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.அதனையடுத்து, எருமாடு சுற்றுவட்டார பகுதிகளில், தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இவரின் வீட்டிற்கு அருகே உள்ளவர்கள், கேரளா மாநிலத்திற்கு பணிக்கு செல்கின்றனர்.
கேரள மாநிலத்தில் பன்றி காய்ச்சல் பரவி வரும் நிலையில், இங்கும் பரவி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இங்குள்ள மக்களுக்கு, 'டேமிபுளூ' மாத்திரைகள் வழங்கப்பட்டது. சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி கூறுகையில்,''கோழிக்கோடு மருத்துவமனையிலிருந்து மருத்துவ அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்த பின்னரே முழுமையான தகவல் தெரிவிக்கப்படும். எனினும் முன்னெச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X