கால்நடை ஆய்வாளர் தேர்வு: விண்ணப்பதாரர்கள் குழப்பம்

Added : ஜன 14, 2020
Advertisement

பந்தலுார்:கால்நடை ஆய்வாளர் பணியிடத்துக்கு, விண்ணப்பங்கள் பெற்றுள்ள நிலையில், தேர்வு குறித்த விபரங்கள் தெரியாமல் விண்ணப்பதாரர்கள் குழப்பத்தில் உள்ளனர்.கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடை ஆய்வாளர் பணியிடத்திற்கு, விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. கடந்த மாதம், 20ம் தேதி கடைசி தேதி என்று, குறிப்பிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெற்ற நிலையில், தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக, விபர குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால். விண்ணப்பதாரர்களுக்கு, 'எந்த அடிப்படையில் வினாக்கள் கேட்கப்படும்; தேர்வு முறைகள் என்ன; தேர்வு எப்போது,' என்ற எந்த விபரங்களும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதனால், எந்த பாடங்களை படிப்பது, தேர்வு முறை எப்படி இருக்கும் என்று தெரியாமல், அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.மேலும், இது குறித்து கால்நடை பராமரிப்புதுறை தலைமை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோதும், விளக்கம் அளிக்க வில்லை.ஏற்னகவே கால்நடை பராமரிப்புதுறையில், பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, எந்த தேர்வும் நடத்தாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இந்த விண்ணப்பங்களும் பெயரளவிற்கு பெறப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் நீலவண்ணன் கூறுகையில்,''தற்போது, சென்னை அலுவலகத்தில் விண்ணப்பங்கள், சரிபார்க்கப்பட்டு வருகிறது. தேர்வு என்பது, பிளஸ்-2, வரையிலான பாடங்களில் பொது அறிவு மற்றும் கால்நடைகள் குறித்து பொது தகவல்கள் அடங்கியதாக இருக்கும். எனினும், குறிப்பாக எந்த வகையாக தேர்வு என்பதை இதுவரை தீர்மானிக்கப்படவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X