சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மார்க்கெட் கமிட்டி முன் விவசாயிகள் மறியல்

Added : ஜன 14, 2020
Advertisement

திருக்கோவிலுார்:அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளின் விலை பொருட்களுக்கு பணம் கொடுக்காததால் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
அரகண்டநல்லுாரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மாவட்டத்தில் அதிக விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்யப்படும் இடமாகும். இதன் கண்காணிப்பாளராக செல்வம் பணியில் உள்ளார்.கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கமிட்டியில் விற்பனை செய்த விவசாயிகளுக்கான பணம் வங்கி கணக்கில் ஒழுங்காக செலுத்தப்படவில்லை. இதன் மூலம் விவசாயிகளுக்கு 2.50 கோடி ரூபாய் நிலுவைத் தொகை இருப்பதாக கூறப்படுகிறது.நேற்று விலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள், வங்கி கணக்கில் பணம் செலுத்தாமல், நேரடியாக கையிலேயே பணத்தை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.ஏற்கனவே விளைபொருட்களை விற்பனை செய்துவிட்டு வங்கி கணக்கில் பணம் வராமல் காத்திருக்கும் விவசாயிகளுடன், நேற்று விற்பனை செய்த விவசாயிகளும் சேர்ந்து மாலை 4:00 மணியளவில் கமிட்டி முன்பாக திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த, அரகண்டநல்லுார் போலீசார் மார்க்கெட் கமிட்டி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி விவசாயிகளை கமிட்டி வளாகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதனால் மாலை 5:00 மணி வரை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.தற்காலிக கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.வியாபாரிகள் கொள்முதல் செய்யும் விளைபொருட்களுக்கு அன்றைய தினமே விற்பனைக் கூடத்தில் ஆன்லைன் முறையில் பணம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தப்பட்ட பணம் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும். இ நாம் என்ற திட்டத்தின் மூலம் மத்திய அரசு இம்முறையை செயல்படுத்தி வருகிறது.கமிட்டி கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைகூட செயலரின் திறமையின்மை காரணமாக, ஒரு சில வியாபாரிகள் கொள்முதல் செய்த பொருட்களுக்கு ஒழுங்காக பணம் செலுத்தவில்லை. இதுவே பிரச்னைக்கு காரணமாக அமைந்து விட்டது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X