சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் நகை கடைகளில் வருமான வரித்துறை சோதனை

Added : ஜன 14, 2020
Advertisement
 திருப்பூர் நகை கடைகளில் வருமான வரித்துறை சோதனை

திருப்பூர்:திருப்பூரிலுள்ள நான்கு பிரபல நகை கடைகளில் நேற்று ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
திருப்பூர், ஈஸ்வரன் கோவில் வீதியிலுள்ள கந்தேவேல் ஜூவல்லரி, யுனிவர்சல் தியேட்டர் ரோட்டிலுள்ள நடராஜ் செட்டியார் ஜூவல்லரி, மங்கலம் ரோட்டிலுள்ள அம்மன் ஜூவல்லரி மற்றும் முனிசிபல் ஆபீஸ் வீதியிலுள்ள கே.ஆர்.பி.எஸ்., ஜூவல்லரி ஆகிய நகை கடைகளில் நேற்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.காலை 10:30 மணியளவில் இந்த கடைகள் திறந்து விற்பனை துவங்கிய சிறிது நேரத்தில், அதிகாரிகள் குழு இந்த ஆய்வில் ஈடுபட்டது. ஒரே நேரத்தில், நான்கு கடைகளிலும் அதிகாரிகள் குழு ஆய்வில் ஈடுபட்டனர். காலையில் துவங்கிய இந்த சோதனை நேற்று மாலை வரை நீடித்தது.சோதனையின் போது, கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
ஊழியர்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஒரே நேரத்தில் பிரபல நகை கடைகளில் நடந்த வருமான வரித்துறை சோதனை காரணமாக பரபரப்பு நிலவியது.நகை கடைகளில் விற்பனை பில்களும், நிறுவனத்தினர் சமர்ப்பித்த வருமான வரி தொடர்பான ஆவணங்களும் சரியாக உள்ளனவா என்பது குறித்து ஆய்வு நடந்தது.தங்கம் கொள்முதல், விற்பனை செய்யப்பட்ட விவரம் மற்றும் இருப்பு விவரங்கள் இந்த ஆய்வின் போது சரி பார்க்கப்பட்டன. நேற்று இரவு, 8:00 மணியை தாண்டியும், சோதனை தொடர்ந்து நடைபெற்றது. இந்த சோதனை குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X