பொது செய்தி

தமிழ்நாடு

2.50 லட்சம் மலர் நாற்றுகள்: சிம்ஸ் பூங்காவில் நடவு

Added : ஜன 14, 2020
Advertisement
 2.50 லட்சம் மலர் நாற்றுகள்: சிம்ஸ் பூங்காவில் நடவு

குன்னுார்:குன்னுார் சிம்ஸ் பூங்காவில் வரும் கோடை சீசனுக்கு, 2.50 லட்சம் மலர்கள் நடவு பணி துவங்கியது.நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்காவில், ஆண்டுதோறும் ஏப்., மே மாத கோடை சீசனில் சுற்றுலா பயணிகளை கவர, தோட்டக்கலை துறை சார்பில், பழ கண்காட்சி நடத்துவதுடன், அரிய மலர்கள் நடவு செய்யப்படுகிறது.இந்த ஆண்டு, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின், 'பிளாக்ஸ், ஆன்ட்ரினம், பால்சம், பெகோனியா, ஆப்ரிக்கன் மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, பேன்சி, ஹோலிஹாக், டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா,ஸ்டாக், கேலன்டுலா, கேன்டிட் ப்ட், டயான்தஸ், கிளார்கியா, ஜின்னியா, ஸ்வீட் வில்லியம்,' உட்பட, 110 வகைகளில், மலர்நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டன. இதில், 2.50 லட்சம் மலர்கள் நடவு செய்யும் பணி, நேற்று சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பபிதா தலைமை வகித்து, மலர் நாற்றுக்களை நடவு செய்து துவக்கி வைத்தார்.தொடர்ந்து, முதன் முறையாக அனைத்து தோட்டக்கலை பணியாளர்கள், ஊழியர்கள் மலர் நாற்றுக்களை நடவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X