சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.16 லட்சம் தேங்காய் பருப்பு கடத்திய மூவர் அதிரடி கைது

Added : ஜன 14, 2020
Advertisement
 ரூ.16 லட்சம் தேங்காய் பருப்பு கடத்திய மூவர் அதிரடி கைது

திருப்பூர்:காங்கயத்தில், 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தேங்காய் பருப்பை கடத்திய, மூவரை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், கிணத்துக்கடவை சேர்ந்தவர், கார்த்திகேயன். திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த, காமாட்சிபுரத்தில் தேங்காய் பருப்பு விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார்.இங்கு மேலாளராக பணிபுரியும் தமிழ்செல்வனிடம், கடந்த 11ம் தேதி, காங்கயத்தில் உள்ள ஒரு லாரி அலுவலகத்தில் இருந்து வந்த போனில், 'கேரளா செல்லும் லாரி ஒன்று இங்கு வந்துள்ளது; கேரளாவுக்கு தேங்காய் பருப்பு லோடு இருக்கிறதா என லாரிக்காரர்கள் கேட்கின்றனர்' என்று கேட்டுள்ளனர். 'கேரளாவுக்கு லோடு உள்ளது, வரச் சொல்லுங்கள்' என தமிழ்செல்வன் கூறியுள்ளார்.உடனே, அங்கு லாரி வந்தது. 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 ஆயிரத்து 600 கிலோ தேங்காய் பருப்பு மூட்டைகள், லாரியில் ஏற்றப்பட்டன. லாரியில் ஏற்றும் போது, லாரியின் ஆவண நகல்களை தமிழ்செல்வன் கேட்டார்.ஆவணங்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒர்க் ஷாப்பில், இருப்பதாகவும், எடுத்து வந்து கொடுத்துவிட்டு, பின் லாரியை எடுத்து செல்வதாகவும், லாரி டிரைவர் கூறியுள்ளார்.இரவு 8:00 மணியளவில் தேங்காய் பருப்பு தொடர்பான பில்களை அலுவலக அறையில் வைத்துவிட்டு, தமிழ்செல்வன் பாத்ரூம் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, பில் மற்றும் லாரியுடன், டிரைவர் மற்றும் அவருடன் வந்த இருவரும் மாயமானது தெரிந்தது.காங்கயம் போலீசார் நடத்திய விசாரணையில், லாரி, கேரள மாநிலம், பாலக்காடு, கொல்லங்கோடு பகுதியில் இருப்பது தெரிந்தது.இதுதொடர்பாக, திருப்பூர் மாவட்டம், சென்னிமலையை சேர்ந்த அருணகிரிநாதன், 46, திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த பிரபாகரன், 29 மற்றும் பாலக்காட்டை சேர்ந்த ஹைட்ரோஸ், 46 ஆகியோரை கைது செய்த போலீசார், தேங்காய் பருப்பு மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X