பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி பரிமாற்ற திட்டம்: 40 மாணவர்கள் பயன்

Added : ஜன 14, 2020
Advertisement

திருச்சி: பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ், அரசுப்பள்ளி மாணவர்கள் வேளாண் கல்லூரிக்கு சென்று பார்வையிட்டனர். தமிழக கல்வித்துறையின் பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ், திருச்சி, இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி, நவலூர் குட்டப்பட்டு ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், பள்ளிகளை பார்வையிட்டனர். நவலூர் குட்டப்பட்டு ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த, எட்டாம் வகுப்பு மாணவர்கள், 20 பேர், கடந்த, 10ம் தேதி, பெரியநாயகி சத்திரம் பள்ளிக்கு சென்று, அங்கு கற்றல், ஆய்வகங்களை பயன்படுத்துதல், வழிபாட்டு கூட்டம் என, அன்றைய பள்ளி நிகழ்வுகளில் பங்கேற்றனர். நேற்று, இனாம்பெரியநாயகி சத்திரம் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர் அன்பரசன் தலைமையில், எட்டாம் வகுப்பைச் சேர்ந்த, 20 மாணவர்கள், நவலூர் குட்டப்பட்டு பள்ளிக்கு சென்றனர். அங்கு காலை முதல் மதியம் வரை இருந்து, பள்ளி நடவடிக்கைகளில் பங்கேற்றனர். பின் அந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஜூலியட் ரூபெல் உடன் இணைந்து, அங்குள்ள வேளாண் கல்லூரிக்கு சென்று விவசாயம், விதைகள் பற்றி அறிந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X