துபாய்: வறண்ட பூமியான ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த பலத்த மழையில் முக்கிய நகரங்கள் சார்ஜா, துபாய், அபுசகாரா, புர்ஜ்கலிபா, உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

பனியால் வாட்டி வந்த இந்நகரில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வரலாற்றில் இல்லாத இடி , மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளதால் நகர இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இந்த மழை காரணமாக அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக விவசாயம் பலன் பெறும் என அந்நாட்டு அமைச்சர் தானி அஹம்மது அல்சயாதி கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்: பருவகால மாற்றம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் பனியால் பாதித்து இருந்தோம் . தற்போது திடீர் மழை மகிழ்ச்சி அளிக்கிறது.

இது காலநிலை மாற்றம் மற்றும் மேககூட்டங்களின் கலவை காரணமாக மழை பெய்துள்ளது. இந்த இயற்கை வரவை நாட்டின் வளத்திற்கு உதவியாக செயல்படுத்துவோம். இன்னும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. என கூறினார்.

கடந்த 1996ஆம் ஆண்டு அல் ஐன் பகுதியில் 144 மி.மீ மழை பெய்தது. இந்த பொழிவுக்கு பின்னர் தற்போதுதான் அமீரகத்தில் பலத்த கனமழை பெய்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE