பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - சேலம்

Added : ஜன 14, 2020
Advertisement

தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை தேவை: சங்ககிரி பேரூராட்சி, 12வது வார்டு, கொய்யாமரத்து காட்டில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கொய்யாமரத்து காட்டிலிருந்து, புதிய இடைப்பாடி சாலை வரை, ஒரு கி.மீ., தூரம் வரை தார்ச்சாலை அமைக்க, 10 ஆண்டுகளுக்கு முன், ஒரு அடுக்கு ஜல்லி அமைத்தனர். அதன் பின்னர் சாலை அமைக்காமல் விட்டுவிட்டனர். தற்போது, சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ப.வெங்கடேஸ்வரன், சங்ககிரி.

கழிப்பிடம் இல்லாததால் சிரமம்: மல்லூர், அம்பேத்கர் நகரில், 1,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அங்கு, பொதுக்கழிப்பிடம் இல்லாததால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சேலம்-கரூர் ரயில் பாதையை, மக்கள் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். கடந்த மாதம், இயற்கை உபாதையை கழிக்க சென்ற மூதாட்டி ரயில் மோதி இறந்தார். அங்கு, பொதுக்கழிப்பிடம் கட்டுவதற்கு, பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சி.சின்னு, மல்லூர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X