பொது செய்தி

தமிழ்நாடு

பி.டி.ஓ., அலுவலகத்தில் சேர்மன், கவுன்சிலர்கள் அறிமுக கூட்டம்

Added : ஜன 14, 2020
Advertisement

ஓமலூர்: ஒன்றியக்குழு தலைவர், உறுப்பினர்கள் அறிமுகம் கூட்டம் நேற்று நடந்தது. காடையாம்பட்டியில் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டதையடுத்து, நேற்று காலை பி.டி.ஓ., அலுவலகத்தில், அறிமுகக்கூட்டம், குழுத்தலைவர் மாரியம்மாள் தலைமையில் நடந்தது. அதில், தேர்தல் பணியாற்றிய அலுவலர்களுக்கும், அதிகாரிகளுக்கும், கவுன்சிலர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். துணைத்தலைவர் மகேஸ்வரி உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம், ஓமலூர் பி.டி.ஓ., அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோரை, ஓமலூர் பி.டி.ஓ.,முருகன் பாராட்டி வாழ்த்து தெரிவித்து, தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X