பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : ஜன 14, 2020
Share
Advertisement

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலக நுழைவாயிலில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார கிளை செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். மறைமுக உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றிய, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். தாக்கிய சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என, கோஷம் எழுப்பினர். கறுப்பு பேட்ஜ் அணிந்து, பணியில் ஈடுப்பட்டனர். ஆணையாளர் ராஜா, பி.டி.ஓ., மணிவண்ணன், துணை பி.டி.ஓ.,க்கள், அலுவலக பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X