பொது செய்தி

தமிழ்நாடு

நிலவேம்பு கஷாயம் வழங்கியதால் போலீசாருக்கு 'டெங்கு' பாதிப்பில்லை

Added : ஜன 14, 2020
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர் அரசு மருத்துவமனை சித்தா, ஓமியோபதி பிரிவு மற்றும் மத்திய அரசின் 'ஆயுஸ்' மருத்துவமனை இணைந்து, தேசிய சித்தா நாள் கொண்டாடினர்.
தலைமை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) ஆக்னஸ்ப்யூலா தலைமை வகித்தார். இதில், ஆத்தூர் டி.எஸ்.பி., ராஜூ பேசியதாவது: பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள், மூலிகையை உணவாக பயன்படுத்தியதால், 100 வயதுக்கு மேல், உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்துள்ளனர். 'டெங்கு' காய்ச்சல் அதிகரித்தபோது, நிலவேம்பு கஷாயம் அருந்தியதால் நோய் தாக்கம் குறைந்து, உயிர் பலி குறைந்துள்ளது. ஆத்தூர் சப்-டிவிசனுக்கு உட்பட்ட போலீசாருக்கு, சித்த மருத்துவ பிரிவு சார்பில், நிலவேம்பு கஷாயம், மருந்து வழங்கியதால் டெங்கு காய்ச்சலே ஏற்படவில்லை. சித்த மருத்துவ மருந்துகள் பக்கவிளைவு இல்லாமல், வாழ்நாளை அதிகரிக்க செய்து, உடல் ஆரோக்கியமாக வைத்திருக்கும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, சித்த மருத்துவ பிரிவு வளாகத்தில், திப்பிலி, மஞ்சள், வெள்ளை கரிசலான், அமுக்ரா, சீந்தில் உள்ளிட்ட மூலிகை செடிகள் நடப்பட்டன. சித்த மருத்துவ பிரிவு தலைமை மருத்துவர் கோவிந்தராஜ், ஓமியோபதி லட்சுமணன், இன்ஸ்பெக்டர் உமாசங்கர், ரெட்கிராஸ், ரோட்டரி சங்க நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X