தமிழ்நாடு

காவிரி கரையோரம் செங்கரும்பு அறுவடை: விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஜன 14, 2020
Advertisement

மேட்டூர்: காவிரி கரையோரம், செங்கரும்பு அறுவடை தீவிரமாக நடக்கும் நிலையில், பொங்கல் நெருங்கியதால் கொள்முதல் விலை சற்று அதிகரித்துள்ளது.
மேட்டூர் அருகே, காவிரி கரையோரம், கோல்நாயக்கன்பட்டி ஊராட்சியில், 80 ஏக்கர், நவப்பட்டியில், 20 ஏக்கர் என மொத்தம், 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்திருந்தனர். கரும்புகளை கூட்டுறவு சங்கத்தினரும், மொத்த வியாபாரிகளும் கடந்த சில நாட்களாக கொள்முதல் செய்தனர். பொங்கலுக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில், அறுவடை செய்யாமல் விடப்பட்ட கரும்புகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. அந்த கரும்புகளை, சற்று கூடுதல் விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: இப்பகுதியில் மொத்த வியாபாரிகள், ஒரு ஜோடி கரும்பு, 28 ரூபாய்க்கு கொள்முதல் செய்தனர். பொங்கல் நெருங்கிய நிலையில், தற்போது ஒரு ஜோடி கரும்பு, 32 ரூபாய் முதல், 34 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றனர். கொள்முதல் விலை சற்று அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X